வெள்ளி, 17 ஜூன், 2011

ஓம் நம சிவாய!

 சரியை 
      சைவ சித்தாந்த பாதைகளில் ஒன்றான சரியை பற்றி திருமூலர் மிக அழக்காக தமது பாடலில்  விளக்குகிறார். 
         
         பல கோவில்களுக்கு சென்று பாடி பரவி சிவபெருமானை வழிபடுதல். கோவில் வளாகத்தில் உள்ள புல் பூண்டுகளை அகற்றி சுத்தம் செய்தல் போன்றவை சரியை மார்கத்தை சாரும்.

வீடுபேரை அடைய முதல் அங்கமாக சரியை விளங்குகிறது என்று திருமந்திரம் 1443 ஆம் பாடலில் திருமூலர் விளக்குகிறார்.

பல வகை பூசைகள் சரியை மார்கத்தை சாரும் .

உயிர்க்கு  உயிராய்  நிற்றல்  ஒன்ஞனபூசை
உயிர்க்கு ஒளிநோக்கள் மகாயோக  பூசை 
உயிர்ப்பெறும் ஆவாகனம் புறப்பூசை 
சேயிற்கு ஆடை நேசம் சிவபூசை யாமே
                                                                                     திருமந்திரம்-1444 
சரியை வழிபட்டவர்களின் நெஞ்சில் இறைவன் கோயில் கொள்வான் என்பதை ,

நாடும் நகரமும் நட்ட்றிற்கு கோயிலும்
தேடித் திரிந்து சிவபெருமா னென்று 
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் 
கூடிய நெஞ்சத்துத் கோயிலாய் கொள்மின் 
                                                                                   திருமந்திரம்-1445 
 நாடுகள் நகரங்கள் நல்ல கோயில்கள் என்பனவட்ட்ரை தேடி அங்கங்கு சிவன் வீட்டுறிருகிறான் என்று  பாடுங்கள், வணங்குகள் வணங்கிய பின்பு ஒருமைப்பட்ட நெஞ்சத்தை இறைவன் தனது கோவிலாக கொள்வான்.சரியை மார்கத்தில்  நின்றவர் திருனவுக்கரரசர். கோவில் கோவிலாக சென்று உழவார பணிகளை செய்து சிவனருள் பெற்றார்.
 
சிவாய திருச்சிற்றம்பலம்!!!
 
 

ஞாயிறு, 12 ஜூன், 2011

ஓம் நம சிவாய


திருமூலர்

                               சைவ நெறிகளை போதித்தவர் .சித்தர் சபைகளுக்கெல்லாம்  தலைவராகவிளங்குபவர்திருமூலர்.தமிழினத்தின்ஆதியோகியாக கருதபடுபவர்.யோகமார்க்கம்பற்றமுதன்முதலாகஉலகிற்கு விவரித்தவர். இவர் அருளிய நூலே திரு மந்திரம் .   திருமந்திரத்தை  தழுவிய  நூல்  இல்லை.சிவனருள் பெற்று சிவமாக மாறியவர் திருமூலர்.


     சரியை,கிரியை,யோகம்,ஞானம் என்ற நான்கு சைவ சித்தாந்த பாதைகளில் யோகம் பற்றி விரிவாக  கூறியவர் திருமூலரே ஆவர்.

      திருமூலர் மட்டுமே  அஷ்டாங்க யோகத்தையும், அதற்கும்மேலே  நான்கு யோகங்களைபற்றி  கூறுகிறார். அவை  கேசரி யோகம் ,பரியங்க யோகம் , அமுரிதாரணை , சந்திர யோகம்.
           
   யோகத்தின் பயனை எட்டுவகை சித்திகள் கைகூடும். மூச்சை கட்டுபடுத்தும் பிரணாயாமமேயோகா நிலைக்கு உயிர்நாடி ஆகும். பொதுவாக பன்னிரண்டு அங்குலம் உள்ளே சென்று எட்டு அங்குலம் உள்ளே தங்கிட மீதி நான்கு அங்குலம் வெளிப்படும். இதில் பண்ணிறேடு அங்குலத்தையும் உள்ளே தேக்கினால் எட்டு சித்தியும் கைகூடும். இதை பெற ௧௨ ஆண்டுகள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்கிறார் திருமூலர்.



யோகத்தினால் கிட்டும் எண்வகை சித்திகள்:

1.அணிமா: பஞ்சினும் மெல்லியதாக மாறுவது. இது ஒரு ஆண்டில் கைகூடும்.


2 .மகிமா: பருமையான பொருளாதல். இது ஒரு ஆண்டில் கைகூடும்.


3 .கரிமா:கூடு விட்டு கூடு பாய்தல்.இது ஒரு ஆண்டில் கைகூடும்.


4 .லகிமா: இலகுவாகும் தன்மை ம்பெருதல். இது ஐந்து ஆண்டில் கைகூடும்.


5 . ப்ராப்தி : விரும்பியது எய்துதல் . இது ஒரு ஆண்டில் கைகூடும்.

6 . பிரகாமியம்:ஆக்நையின்  ஒளியை காண வல்லவராதல் . இது ஒரு ஆண்டில் கைகூடும்.


7 . ஈசத்துவம்: தானே  படைக்கவும்.அழிக்கவும் வல்லவராதல் . இது ஒரு          ஆண்டில்கைகூடும்.

8 . வசித்துவம்: உடல் பொன்மையமாதல்.புலன்கள் அழிந்திடும் . இது ஒரு ஆண்டில் கைகூடும்.

இதில் கூறும் ஒருஆண்டு என்பது ஒவ்வொரு சித்தியும் பெற்ற பின் ஓரண்டகும் .






"சிவாய  திருச்சிற்றமபலம்"







 


 
 



 









 









ARIVOM AANMIGAM: ஆன்மிகம் ஆன்மிகம் என்பது மனித வாழ்வின் தத்துவம் த...

ARIVOM AANMIGAM: ஆன்மிகம்
ஆன்மிகம் என்பது மனித வாழ்வின்

தத்துவம்
த...
: "ஆன்மிகம் ஆன்மிகம் என்பது மனித வாழ்வின் தத்துவம் திறவுகோல் அன்பு ஆனந்தம் அன்பின் ஆழம் . அன்பின் நெறி , அன்பின் வழி , அன்பின் செயல்..."

சனி, 11 ஜூன், 2011


குண்டலினியோகம்


மனித சரீரத்தை தாங்கி நிற்பதே குண்டலினி சக்தியே.

குண்டலினி யோகத்தை உணர்ந்து அதன் அளவற்ற ஆற்றல் ஆன பிரபையில் மூழ்கி அந்த ஜோதியில் தானும் ஜோதி மாயம் ஆகி விட்டவர்களே சித்தர்கள்.சித்தர்கள் பலரும் இந்த குண்டலினி சக்தியை வாலை வழிபாடு,வலை பூஜை, ஆயி பூஜை என்றும் கூறுவார். இந்த வலை பெண் சோதி ரூபமுடையவள், சுடர் விட கூடியவள், பிரகாசிப்பவள்.

குண்டலினி சக்தி என்பது முதுகுத் தண்டின் கீழே தான் இருக்கிறது என்பது உண்மையானது இல்லை. மூலாதாரம் என்பது மல வாசலாகிய குதத்துக்கும் மூத்திர வாசலாகிய நீர்பைக்கும் மத்தியில் உள்ளது . அங்கே தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு சுருண்டு மண்டல மிட்டபடியாக தூங்கி கொண்டிருக்கிறது.அப்படி தூங்கி கொண்டிருக்கும் அந்த குண்டலினி பாம்பை யோக சக்தியைக் கொண்டு மூலாதாரம், சுவதிஸ்டானம், மணிப்பூரகம்,
அனாகதம், விசுக்தி, ஆக்ஞை, வழியாக சகஸ்ராரத்தில் கொண்டு வந்து மேலே நிறுத்தி விட்டால் யோகம் முடிந்து விட்டது, பின் அபூர்வ சித்திகளும் படைக்கும் ஆற்றலையும் பெற்று விடலாம் என்பது தற்கால யோக நெறி ஆசிரியர்களின் போதனையும் யோக நூலில் முடிவாகும். ஆனால் இது கற்பனை.
 
திருமூலர் மற்றும் பல சித்தர்கள் கூறுவதை மறுத்து கூறுவது மடத்தனம் என்று பலர் நினைக்க கூடும். அவர்கள் மூலாதாரத்தை பற்றி பரிபாசையாக புரியாத புதிராக மறைத்து கூறினார். பலபல பெயர்களில் மறைத்து கூறினார். வெளிபடையாக கூறவில்லை.


மேலே குறிப்பிட்ட ஆதாரங்கள் ஆறும் மேலே இருந்து இயக்கும் குண்டலினி சக்தியிடம் இருந்து சக்தி பெற்றுக் கொண்டு உடலை இயக்க வைக்கிறது
குண்டலினி சக்தியல் இருந்து ஆதாரங்களுக்கு சக்தி வரவில்லை என்றால் உடல் செயல் நின்று விடும் என்பது உண்மை.
எண்சான் உண்டபிற்கு சிரசே பிரதானம். குண்டலினி சக்தி இடபக்க சிரசில் இருக்கிறது

சிவ பெருமானின் இடது பக்க முடியில் தரித்திருக்கும் இளம் பிறை குண்டலினியின் குறியீடு. மேலே உள்ள குண்டலினி சக்தியில் இருந்து கீழே உள்ள ஆதாரங்கள் வேண்டிய சக்தி பெறுகிறது.மேலே உள்ள குண்டலினி சக்தியில் இருந்து கீழே உள்ள ஆதாரங்கள் வேண்டிய சக்தி பெறுகிறது. அந்த ஆதர கமலங்களில்இருந்து காரணங்களான மனம் சித்தி புத்தி அகங்காரம் சித்தம் ஆகியன செயல் படுகின்றது. ஆக உயிரை செயல் படுத்தும் ஆதர கமலம் வேறு உடலை செயல் படுத்தும் ஆதர கமலம் வேறு. உயிரை செயல் படுத்தும் ஆதர கமலமே மூலாதாரம், அதுவே குண்டலினி வட்டம். குண்டலினியில் இருந்து இந்த ஆதாரங்களுக்கு தேவை படும் சக்தியை கீழே இறக்காமல் துண்டித்து விட்டு குண்டலினி யாகிய சோதியில் மனதை நிறுத்தி கொள்ள உடற் கருவிகளும் மனம் முதலிய அந்த காரணங்களும் செயல் படுவதில்லை. ஆன்ம தனித்து
குண்டலினி சோதியில் தன்னை நிறுத்தி வியப்புடன் பராக்கு பார்ப்பது போலே செயல் மறந்து ஒளியில் கலந்து ஒளியாகி நிற்கிறது. இந்த காட்சியை கண்டு கண்டு ஆனந்த்திக்கிறது . இந்த காட்சியை காண்பதற்கு கண்கள் தேவை இல்லை.
இது புலன் கடந்த காட்சி.

ஆன்மாவானது தத்துவங்களில் இருந்து நீங்கி தான் தானாக ஆனந்தபடும்பொதுதான் ஆன்மாவின் உள்ளதாரம் எனும் உயிரை இயக்கும் ஹைபோதலாமஸ், பிட்யுட்டரி பினியல் செரிபெரம் ஆகிய பகுதிகள் கிளர்ச்சி அடைந்து அமிர்த கலைகலாக மாரி தேகத்தை
வேதியல் செய்கிறது .இந்த அனுபவம் முதிர உடலில் நிற மாற்றம் ஞானவொளி சந்தம் பிறரை ஊடுருவி பார்க்கும் திறன் ஏற்படுகின்றது.இது தான் உண்மையான குண்டலினி தவமாகும்.

 
 

ஆன்மிகம்

ஆன்மிகம் என்பது மனித வாழ்வின்

தத்துவம்
திறவுகோல்
அன்பு
ஆனந்தம்

அன்பின் ஆழம் . அன்பின் நெறி , அன்பின் வழி  , அன்பின் செயல் , அன்புமயம் , மனமற்ற நிலை யோக பயிற்சியின் விளக்கம் .
 

 அன்பற்ற மனம் அது ஆன்மீக எதிர்ப்பு , ஆன்மீக கோட்பாடுகளுக்கு எதிரானது


 
அன்பு யாவர்க்கும் உரியது .
 

 தேவை என்ற ஒன்றிருக்குமானால் அது அன்பல்லாது வேறில்லை .
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரிகளுக்கும் இவ்வுலகில் வாழ உரிமையுள்ளது . இதனை உணராதவரை இறைவனை உணர முடியாது .



மனிதனால் மட்டும் எப்பயனும் கருதாது அதனுள் அமிழ்ந்து அதனை வெளிக்கொணர வேண்டுமென்பதற்காகவே அவனுக்குப் பிறப்பு நிகழ்த்தப் படுகிறது .



மரணம் உடலுக்கு மட்டுமே . ஆன்மாவுக்கு அல்ல . ஆன்மாவே அன்பின் ஊற்றுக்கண் . கன்மா அதனை அடைத்து விடுகிறது . எனினும் அதனின்றும் வெளிப்போந்த சிறு கசிவே அவனுக்கும் பாசம் -பரிவு -கருணை என உணர்த்திக் கொண்டேயிருக்கிறது .



ஆன்மா கன்மாவினின்றும் முழுதும் விடுதலை பெறும்போது இறைவனின் பெருங்கருணை , அன்பு வெள்ளத்தில் அதனை உணர்ந்த படியே கலந்து விடுகிறான் .


மனத்துள் (மனத்துக் கண் மாசிலன் ஆதல் ”) அன்பைக் கொணரும் வழியே ஆன்ம தத்துவம் . அதுவே ஆன்மிகம் . அவ்வழியினைக் காட்டுவது யோக நெறி . அதனைப் போதித்தவர் மகரிஷி ஸ்ரீ பதஞ்சலியாவார். அந்த ஞான வள்ளலை பணிந்தேற்றுவோம் . பயன் பெறுவோம் .
 


பிறப்பன இறப்பது நிச்சயம்

பிறப்பறும் பெரும் நிலை சத்தியம்