சனி, 11 ஜூன், 2011

ஆன்மிகம்

ஆன்மிகம் என்பது மனித வாழ்வின்

தத்துவம்
திறவுகோல்
அன்பு
ஆனந்தம்

அன்பின் ஆழம் . அன்பின் நெறி , அன்பின் வழி  , அன்பின் செயல் , அன்புமயம் , மனமற்ற நிலை யோக பயிற்சியின் விளக்கம் .
 

 அன்பற்ற மனம் அது ஆன்மீக எதிர்ப்பு , ஆன்மீக கோட்பாடுகளுக்கு எதிரானது


 
அன்பு யாவர்க்கும் உரியது .
 

 தேவை என்ற ஒன்றிருக்குமானால் அது அன்பல்லாது வேறில்லை .
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரிகளுக்கும் இவ்வுலகில் வாழ உரிமையுள்ளது . இதனை உணராதவரை இறைவனை உணர முடியாது .



மனிதனால் மட்டும் எப்பயனும் கருதாது அதனுள் அமிழ்ந்து அதனை வெளிக்கொணர வேண்டுமென்பதற்காகவே அவனுக்குப் பிறப்பு நிகழ்த்தப் படுகிறது .



மரணம் உடலுக்கு மட்டுமே . ஆன்மாவுக்கு அல்ல . ஆன்மாவே அன்பின் ஊற்றுக்கண் . கன்மா அதனை அடைத்து விடுகிறது . எனினும் அதனின்றும் வெளிப்போந்த சிறு கசிவே அவனுக்கும் பாசம் -பரிவு -கருணை என உணர்த்திக் கொண்டேயிருக்கிறது .



ஆன்மா கன்மாவினின்றும் முழுதும் விடுதலை பெறும்போது இறைவனின் பெருங்கருணை , அன்பு வெள்ளத்தில் அதனை உணர்ந்த படியே கலந்து விடுகிறான் .


மனத்துள் (மனத்துக் கண் மாசிலன் ஆதல் ”) அன்பைக் கொணரும் வழியே ஆன்ம தத்துவம் . அதுவே ஆன்மிகம் . அவ்வழியினைக் காட்டுவது யோக நெறி . அதனைப் போதித்தவர் மகரிஷி ஸ்ரீ பதஞ்சலியாவார். அந்த ஞான வள்ளலை பணிந்தேற்றுவோம் . பயன் பெறுவோம் .
 


பிறப்பன இறப்பது நிச்சயம்

பிறப்பறும் பெரும் நிலை சத்தியம்


      

கருத்துகள் இல்லை: