வெள்ளி, 17 ஜூன், 2011

ஓம் நம சிவாய!

 சரியை 
      சைவ சித்தாந்த பாதைகளில் ஒன்றான சரியை பற்றி திருமூலர் மிக அழக்காக தமது பாடலில்  விளக்குகிறார். 
         
         பல கோவில்களுக்கு சென்று பாடி பரவி சிவபெருமானை வழிபடுதல். கோவில் வளாகத்தில் உள்ள புல் பூண்டுகளை அகற்றி சுத்தம் செய்தல் போன்றவை சரியை மார்கத்தை சாரும்.

வீடுபேரை அடைய முதல் அங்கமாக சரியை விளங்குகிறது என்று திருமந்திரம் 1443 ஆம் பாடலில் திருமூலர் விளக்குகிறார்.

பல வகை பூசைகள் சரியை மார்கத்தை சாரும் .

உயிர்க்கு  உயிராய்  நிற்றல்  ஒன்ஞனபூசை
உயிர்க்கு ஒளிநோக்கள் மகாயோக  பூசை 
உயிர்ப்பெறும் ஆவாகனம் புறப்பூசை 
சேயிற்கு ஆடை நேசம் சிவபூசை யாமே
                                                                                     திருமந்திரம்-1444 
சரியை வழிபட்டவர்களின் நெஞ்சில் இறைவன் கோயில் கொள்வான் என்பதை ,

நாடும் நகரமும் நட்ட்றிற்கு கோயிலும்
தேடித் திரிந்து சிவபெருமா னென்று 
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் 
கூடிய நெஞ்சத்துத் கோயிலாய் கொள்மின் 
                                                                                   திருமந்திரம்-1445 
 நாடுகள் நகரங்கள் நல்ல கோயில்கள் என்பனவட்ட்ரை தேடி அங்கங்கு சிவன் வீட்டுறிருகிறான் என்று  பாடுங்கள், வணங்குகள் வணங்கிய பின்பு ஒருமைப்பட்ட நெஞ்சத்தை இறைவன் தனது கோவிலாக கொள்வான்.சரியை மார்கத்தில்  நின்றவர் திருனவுக்கரரசர். கோவில் கோவிலாக சென்று உழவார பணிகளை செய்து சிவனருள் பெற்றார்.
 
சிவாய திருச்சிற்றம்பலம்!!!
 
 

கருத்துகள் இல்லை: